புலிகளிடமிருந்து மீட்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. கிழக்கு மாகாணம் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளதுடன் அபிவிருத்தி செயற்றிட்டங்களும் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது: .
30 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தால் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் பல தடவைகள் கிழக்கில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும் முழுமையாக இம்முறையே மீட்கப்பட்டுள்ளது. கிழக்கு மீட்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கையாக அம்மாகாணம் துரித கதியில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கிழக்கு மாகாணம் தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அமைச்சர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. அமைச்சர்கள் ஒவ்வொரு பொறுப்புக்களையும் ஏற்று அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். .
இதுவரை காலமும் அச்சம் காரணமாக தமிழ் மக்களும் புலிகள் பக்கமே இருந்தனர். ஆனால் தற்போது புலிகள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்க ஆரம்பித்துள்ளனர். எனவே கிழக்கு வெற்றியையும் அபிவிருத்தி பணிகளையும் எவரும் குறைத்து மதிப்பிடக்கூடாது. சுதந்திரத்தை பெற்றுக்கொண்ட உணர்வில் கிழக்கு மீட்பு வெற்றிவிழா கொண்டாடப்படவேண்டும். .
Published: Dec 15, 2009 05:00 GMT