| TamilCanadian News Archives |
» நிபுணர் குழுவை நியமிப்பது நியாயமற்றது
[ Mar 07, 2010 3:59:08 GMT ] [ வீரகேசரி ]
ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு இலங்கை தொடர்பான ஆலோசனை வழங்குவதற்கு நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படுவது கோரப்படாததும் நியாயமற்றதுமாகும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகம் நேற்று விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. [ Full Report ]
|
» குற்றமுள்ள நெஞ்சே குறுகுறுக்கும்....
[ Mar 06, 2010 13:46:40 GMT ] [ உதயன் ]
காமாலைக் கண்ணணுக்குக் காண்பதெல்லாம் மஞ்சள் என்பது போல இலங்கை அரசும், அதன் அமைச்சரும் பிரிட்டிஷ் அமைச்சரின் கருத்துகளைப் பார்த்தால், நோக் கினால் யார் என்ன செய்யமுடியும்? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்பதன் அர்த்தமும் இங்கே மிகப் பொருந் துகிறது. தமிழ் மக்களுக்குரிய பிறப்புரிமைகளை, அவர் களின் பிரிக்கமுடியாத அரசியல் உரிமைகளை வழங்கி னால் இந்தக் குறுகுறுப்புகள் நீங்கியும், நீர்த்தும் போய் விடும் அல்லவா? [ Full Report ]
|
» நிருபமா ராவ் த.தே.கூட்டமைப்புடன் சந்திப்பு
[ Mar 06, 2010 11:43:03 GMT ] [ வீரகேசரி ]
இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து கொழும்பு ஊடகமொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இச்சந்திப்பின் போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடவிருப்பதாக கூறியுள்ளார். [ Full Report ]
|
» தாயகக் கொள்கையை பிரி.வாழ் தமிழர்கள் ஆதரிக்கலாம் ஆனால் விடுதலைப் புலிகளை ஆதரிப்பது சட்டவிரோதம்
[ Mar 06, 2010 5:47:37 GMT ] [ உதயன் ]
தமிழர் தாயகக் கொள்கையை ஆதரிப்பதற்கு பிரிட்டனில் உள்ள தமிழர்களுக்கு உரிமை உள்ளது என்று அந்த நாட்டின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை களுக்கான அமைச்சர் டேவிட் ஹன்சன் அறிவித்துள்ளார். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவளிப்பது சட்டவிரோதமானது என்பதை யும் அவர் வலியுறுத்தியுள்ளார். [ Full Report ]
|
» மகிந்தவைச் சந்திக்கப் இந்தியக் கலைஞர்கள் போட்டி
[ Mar 06, 2010 5:36:15 GMT ] [ வீரகேசரி ]
மஹிந்தவைச் சந்திப்பதில் இந்தியக் கலைஞர்களுக்குத் திடீர் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. இவர்களது இந்தச் சந்திப்பிற்கு இந்து ராம் ஒருங்கிணைப்பாளராகச் செயற்படுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக இந்தியாவின் பிரபல இசைக் கலைஞர் ரவிசங்கர் மகிந்த றாஜபக்சவை அலரி மாளிகையில் நேற்றைய தினம் சந்தித்திருக்கிறார். [ Full Report ]
|
» நவநீதம்பிள்ளை விடுத்த கோரிக்கை அரசினால் நிராகரிப்பு
[ Mar 06, 2010 4:46:49 GMT ] [ வீரகேசரி ]
இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில், அரசாங்கம் சுயாதீனமான விசாரணையை நடத்தவேண்டும் என நேற்று முன் தினம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார். இவரது சுயாதீன விசாரணை கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. [ Full Report ]
|
» போர்க்குற்றங்கள் குறித்து சுயாதீன விசாரணை : நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்து
[ Mar 05, 2010 10:33:19 GMT ] [ வீரகேசரி ]
போர்க் குற்றங்கள் தொடர்பில்,சுயாதீன விசாரணைகள் அவசியம் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். போரின் போது இரண்டு தரப்பினரும் மேற்கொண்ட பாரிய மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் சுயாதீன விசாரணைக்கு இணங்கவேண்டும். அத்துடன் இதற்காக சர்வதேச நாடுகளும் உதவ முடியும் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார். [ Full Report ]
|
» உலகத் தமிழர் மாநாட்டில் மில்லிபாண்ட்; இலங்கையின் இறைமைக்குப் பங்கம்! கடும் சீற்றத்தில் அரசாங்கம்
[ Mar 05, 2010 2:54:14 GMT ] [ உதயன் ]
கடந்த வாரம் பிரிட்டனில் நடைபெற்ற உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் கலந்துகொண்டமை மாபெரும் குற்றம் என்று இலங்கை அரசு கண்டித்துள்ளது. மில்லிபாண்ட் அங்கு வெளி யிட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் அவை இலங்கையின் இறையாண்மைக்கு எதிரான செயற்பாடு என்றும் சீற்றத்துடன் கண்டித்துள்ளது. [ Full Report ]
|
» நிருபமா ராவின் இலங்கை விஜயம்
[ Mar 04, 2010 10:27:05 GMT ] [ உதயன் ]
தமிழர் தரப்பில் அதிக பிரதிநிதித்துவத்தை வெளிப்படுத்தி நிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, "இந்தியாவின் எடு பிடியாகி விட்டது, புதுடில்லியில் ஏவல் நாயாகிவிட்டது' என்றெல்லாம் கூட்டமைப்புக்கு எதிராகக் கடும் பிரசாரங் கள் சில தரப்புகளினால் கிளப்பி விடப்பட்டிருக்கும் சமயத் தில் நிருபமா ராவ் அம்மையார் கொழும்பு வருகின்றார். [ Full Report ]
|
» இலங்கையைப் பிரிக்க மேற்குலக நாடுகள் முயற்சி : அரசாங்கம்
[ Mar 04, 2010 10:23:50 GMT ] [ வீரகேசரி ]
"பிரிட்டன் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கையில் மீண்டும் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. அந்த நாடுகளுக்கு தேவையான பொம்மை அரசாங்கம் ஒன்றை இலங்கையில் அமைப்பதற்கு முயற்சிக்கின்றன. எமது நாட்டின் பூகோள ரீதியான அமைவிடத்தின் முக்கியத்துவம் காரணமாகவே இவ்வாறான முயற்சியில் ஈடுபடுகின்றன என்று" ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். [ Full Report ]
|
» தவறு செய்யும் சாமியார்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை!
[ Mar 04, 2010 10:16:48 GMT ] [ குமுதம் ]
தவறு செய்யும் சாமியார்களை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்று முதலமைச்சர் கருணாநிதி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவந்தாலும், இதுபோன்ற தவறுகள் நடைபெற்றுவருவது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார். [ Full Report ]
|
» மீள்குடியேற்றமாக மாறியுள்ள சிங்கள குடியேற்றம்
[ Mar 04, 2010 10:13:43 GMT ] [ வீரகேசரி ]
மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் பெரும் சிங்களக் குடியேற்றம் ஒன்றிற்கான ஆரம்ப வேலைகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மன்னாரின் முள்ளிக்குளத்திலுள்ள 1000 ஏக்கர் காணி கையகப்படுத்தப்பட்டு இங்கு சுமார் 1000 கடற்படைக் குடும்பங்கள் குடியேற்றப்பட உள்ளதாகவும் இதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டு விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. [ Full Report ]
|
» இலங்கைக்கு எரிபொருள் வழங்க ரஸ்யா இணக்கம்
[ Mar 03, 2010 10:06:46 GMT ] [ வீரகேசரி ]
இலங்கைக்கு எரிபொருள் விநியோகம் செய்வதற்கு ரஸ்யா இணக்கம் தெரிவித்துள்ளது. காஸ்புரும் என்ற நிறுவனத்தின் ஊடாகவே இந்த எரிபொருள் விநியோகம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [ Full Report ]
|
» புலம்பெயர் தமிழ் மக்களை புரிந்து கொள்ளும் மேற்குலகு
[ Mar 03, 2010 10:05:52 GMT ] [ உதயன் ]
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீது தமக்குள்ள உறுதியைப் புலம்பெயர் தமிழர்கள் ஜனநாயக முறை யில் வெளிப்படுத்தி வருகின்றமையை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளத் தொடங்கியிருப்பதும் ஒரு காரணமாகும். மேற்குலகுக்குப் புரிந்த இந்த விடயம் இலங்கை ஆட்சிப் பீடத்துக்கு விளங்காமல் இருப்பது அல்லது விளங்காதமைபோலக் கதை விடுவது விந்தையே! [ Full Report ]
|
» இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர்
[ Mar 03, 2010 10:03:43 GMT ] [ வீரகேசரி ]
இந்தோனேஷியாவின் மெரேக் துறைமுகத்தில் உள்ள படகில் உள்ள இலங்கை அகதிகளின் பேச்சாளர் அலெக்ஸ் இந்தோனேஷிய அதிகாரிகளினால் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக இந்தோனிசியாவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அகதிகள் உண்ணாவிரதத்தைக் மேற்கொண்டு தற்போது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளனர். [ Full Report ]
|
» சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் மீளவும் வற்புறுத்து 'சனல் - 4' வீடியோ நாடா மிக முக்கிய ஆதாரம்
[ Mar 02, 2010 10:13:26 GMT ] [ உதயன் ]
இலங்கையின் உள்நாட்டு மோதலின் இறுதித் தருணங்களில் இடம்பெற்றிருக்கக் கூடிய யுத்தக் குற் றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் இடம் பெறவேண்டும் என ஐக்கிய நாடுகளின் மூத்த அதி காரிகள் இருவர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.அவர்களில் ஒருவர் ஐ.நா வின் தற்போதைய அதிகாரி. மற் றவர் ஏற்கனவே இலங்கையில் ஐ.நா. அதிகாரியாகப் பணியாற்றி யவர் என்பது குறிப்பிடத்தக்கது. [ Full Report ]
|
» பூநகரியில் பொலிஸ் நிலையம் நேற்று திறப்பு
[ Mar 02, 2010 10:12:28 GMT ] [ வீரகேசரி ]
மக்கள் முழுமையாக மீளக் குடியேற முடியாத நிலையிலும் குடியேற்றப்பட்ட மக்கள் அத்தியாவசியத் தேவைகள் எதனையும் நிறைவேற்ற முடியாத அவல நிலையிலும் ஆங்காங்கே பொலிஸ் நிலையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. மக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதில் மந்தகதி காட்டும் அரசு, தனது அதிகாரங்களை நிறுவும் வகையில் இவ்வாறான செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர். [ Full Report ]
|
» அப்படிப்போடு அரிவாளை!
[ Mar 02, 2010 10:09:21 GMT ] [ த.க.செ.சே ]
ஒரு மீனபிடி மந்திரிப் பதவிக்கு 10 இலட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை வாக்குரிமையை தாரைவார்த்த காங்கிரஸ் கட்சி இப்போது "தாயகம் தேசியம் சுயநிர்ணய உரிமை, தனித்துவமான தேசம், இறைமை ஆகிய கொள்கைகளுக்கான அங்கீகாரத்தை பெற்று அதனடிப்படையில் கௌரவமான பாதுகாப்பான அரசியல் தீர்வு அடைவதற்காக அற்பணிப்புடனும் நேர்மையுடனும் உழைக்கும் என சைக்கில் சின்னத்தில் போட்டியிடும! [ Full Report ]
|
» தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது -அரசாங்கம்
[ Mar 01, 2010 22:50:54 GMT ] [ வீரகேசரி ]
தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகளை தற்போதைய நிலையில் விடுதலை செய்ய முடியாது என சிறிலங்கா படையைச் சேர்ந்த பிரிகேடியர் சுகந்த ரணசிங்க தெரிவித்துள்ளார். போராளிகளை விடுதலை செய்யும் படி சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே அரசின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது. [ Full Report ]
|
» சிறிலங்காத் தூதுவர் பாலித்த ஹோகன்ன உரையாற்றவிருந்த ரொரன்ரோ மாநாடு இடைநிறுத்தம்?
[ Mar 01, 2010 22:43:04 GMT ] [ தமிழ் கனேடியன் ]
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தின் தென்னாசிய கல்வியல் துறையின் அனுசரணையில் நடைபெறவிருந்த சிறிலங்காவின் இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான மாநாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுவராக கடமையாற்றும் கலாநிதி பாலித்த ஹோகன்ன கலந்துகொண்டு உரையாற்றவிருந்தமை குறிப்பிடத்தக்கது. [ Full Report ]
|
|
| Next Page |